Friday, 28 February 2014

அரைசதம் அடித்த தல, தளபதி!

தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க... என்னை கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க..."ன்னு இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 50வது நாளுக்கு வந்துவிட்டது வீரம். 

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, சாந்தி, அபிராமி, மாயாஜால் ஆகிய மால் தியேட்டர்களில் தல இன்னும் வேட்டிய மடிச்சுக்கட்டியபடி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் வீரம் வெற்றி நடைபோடுவதாக விநியோகஸ்தர்கள் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது.

இளைய தளபதி விஜய்யும், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ஜில்லாவை ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயின். பொங்கலையொட்டி வெளியான ஜில்லா 50வது நாளுக்கு வந்துவிட்டது. சத்யம், ஸ்கேப், தேவி, அபிராமி, சங்கம், ஆல்பட், பெரம்பூர் எஸ் 2, பிவிஆர், உதயம், கமலா, வளாகங்களில் ஜில்லா கொடி இன்னும் பறக்கிறது. தமிழ்நாட்டில் 60 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

Wednesday, 26 February 2014

சின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி!

சின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி!

Is Anjali says Ok to act in Shakeela Bio-graphy
சித்தி பாரதி தேவியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ்நாட்டு பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக்கொண்டார். அந்த அளவுக்கு சென்னையை தவிர்த்து வருகிறார் அஞ்சலி.

ஆனால், ஆந்திராவுக்கு போன வேகத்தில் சில படங்களில நடித்த அஞ்சலிக்கு இப்போது அங்கு சரியானபடி படமே இல்லையாம். கடைசியாக மசாலா என்றொரு படத்தில் மட்டுமே நடித்தவர் புதிய படங்கள் இல்லாமல், வீடே கதியென்று அடைந்து கிடக்கிறாராம். இதனால் ஏற்கனவே பெருத்துப்போன அவரது உடம்பு இன்னும் பெருத்து கிட்டத்தட்ட சின்ன ஷகீலா போன்று உருண்டு திரண்டு உருமாறி விட்டாராம்.

அதனால்தான், தனது சுயசரிதையை எழுதிவிட்டு அதை படமாக்க களமிறங்கியுள்ள கவர்ச்சி பாம் ஷகீலா, தனது வேடத்தில் நடிக்க இப்போதைய நடிகைகளில அஞ்சலிதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அவரை கைகாட்டியுள்ளாராம். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, ஷகீலா வாழ்க்கை கதையில் நடித்தால் தனது இமேஜ் சுத்தமாக காலியாகி விடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறாராம்.

அதையடுத்து, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததே. அதனால் இந்த படத்தில் நடித்தாலும் விருது கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாறாக, இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இல்லை எனறு சொல்லி அஞ்சலியின் மனசை அசைத்துக்கொண்டிருக்கிறார்களாம். என்றாலும் இன்னும் அசைந்து கொடுக்கவில்லையாம் அஞ்சலி. தொடர்ந்து மெளனவிரதம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறாராம்.